பெறுமதி சேர் வரியை 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கவும்,தொலைத்தொடர்பு வரியை 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்து.
அத்துடன் தனிநபர் வருமான வரிச்சலுகையை 3 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபா வரை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார உறுதிப்பாட்டிற்காக வருமானத்தை அதிகரிக்க வரி அறவீடுகள் திருத்தம் | Virakesari.lk
வரி அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.
வரி அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2019ஆம் ஆண்டுக்கு பிறகு அரசாங்கம் குறைவரி விதிப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது. இதில் மதிப்பு கூட்டு வரி,தனிப்பட்ட வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி ஆகியவற்றின் வரி விகிதங்களை குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி,தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரி தளங்களை குறைத்தல் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தது.
விவசாயம் மற்றும் தகவல் தொழினுல்நுட்பத்திற்கான வரி விலக்குகள் மற்றும் செயற்படுத்தப்பட்ட சேவைகள்,வரி விலக்குகள் மற்றும் வரி விதிமுறைகள் போன்ற ஏராளமான வரிச்சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் வருடமொன்றுக்கு சுமார் 600 பில்லியன்-800 பில்லியன் வரி வருவாய் நட்டத்தை திறைச்சேரி எதிர்க்கொள்ள நேரிட்டது.
எனவே இந்த சீர்த்திருத்தங்கள் 2020 மற்றும் 2021 காலப்பகுதியில் கொவிட் -19 தொற்று பரவல் மற்றும் தொடர்புடைய வளர்ச்சிகள் காரணமாக அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்த திட்டங்களாக கருதப்படுகின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019ஆம் ஆண்டு 12.7 சதவீதத்திலிருந்து 2020ஆம் ஆண்டு 9.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது.2021ஆம் ஆண்டு 8.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் வீதமான 25 சதவீதத்தை காட்டிலும் குறைவானதாகும்.
குறை வரி விதிப்பு, அரச வருமான திரட்டலில் கொவிட் பெருந்தொற்று தாக்கம்,தொற்று நோய் நிவாரண நடவடிக்கைகளுடன் வரவு செலவு திட்ட பற்றாக்குறை 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதமாகவும்,2021ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2சதவீதமாகவும்,2019ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாகவும் சடுதியாக குறைவடைந்தது.
நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதார வளர்ச்சியி;ல் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் முன்னோடியில்லாத பணவீக்க அழுத்தங்கள்,தொடர்ந்து பாரிய நிதி மற்றும் இருப்பு நிதி தேவைகள் ,பெரிய கடன் அதிகரிப்பு மற்றும் முக்கியமான குறைந்த அளவிலான இருப்புக்கள் மற்றும் மாற்று விகிதத்தில் அழுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட கூடியதாக உள்ளது.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் கடன் மதிப்பீடு குறைதல்,வணிகம் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை இழப்பு ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் மோசமாக பாதிப்படைய கூடும்.
அத்துடன் சர்வதேச சந்தைக்கான அணுகல் இழப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ,அந்நிய செலாவணி அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை என்பன அரசாங்க வரவு –செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதில் கணிசமான சிக்கல் தன்மையை தோற்றுவித்துள்ளன.
வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான உள்நாட்டு ஆதாரங்களில் பெரும்பான்மையானது வங்கி மூலங்களிலிருந்து குறிப்பாக மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டது.
உள்நாட்டு வங்கி அல்லாத ஆதாரங்களில் போதுமான அளவு நிகர் நிதி கிடைக்காததால் மத்திய வங்கியின் தொடர்ச்சியான கணிசமான அளவு நிதியளிப்பு பொருளாதாரத்தை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.
வட்டி,சம்பளம்.ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் போன்றவற்றில் கணிசமான பகுதி அரசாங்கத்தின் செலவினங்களை மேற்கொள்வதற்கு பொது திறைச்சேரி மத்திய வங்கியின் நிதியுதவியை பெற வேண்டிய நெருக்கடியான தன்மை தோற்றம் பெற்றுள்ளது.
ஆகவே வருவாயை மேம்படுத்துதல் மற்றும் 2022ஆம் ஆண்டு அதற்கு அப்பால் நாட்டின் நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதி செய்வதற்காக செலவினங்களை குறைனக்ன வலுவான நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை செயற்படுத்துவது அவசியமாகும்.