வரலாற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விழாவில் வில்லியம்ஸ் தம்பதியினர்
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரச தம்பதியினர் கனடா மற்றும் பூர்வகுடிகளுக்கு இடையில் புதிய உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் வரலாற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விழாவில் நேற்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது கனடாவின் 600 வருட நாடாளுமன்ற பழமையை எடுத்துக் காட்டும் வகையில் பொறுப்புகள், பாரம்பரிய சடங்கு மற்றும் நவீன நிர்வாக செயல்பாடுகளை இணைக்கும் இறைமை அல்லது ஆட்சியாளரின் அதிகார சின்னமான Black Rod இல் சமூகங்களிடையே சமரசத்தை எடுத்துக் காட்டும் அடையாளமாக வெள்ளி மோதிரம் ஒன்றை பிரிட்டிஷ் கொலம்பியாவின் இளவரசர் வில்லியம்ஸ் அணிவித்தார்.
பிரிட்டிஷ் கொலம்பிய அரசு, கனேடிய அரசு மற்றும் வெஸ்ட்மின்ரர் அரசை குறிக்கும் மூன்று வெள்ளி மோதிரங்கள் Black Rod இல் ஏற்கனவே உள்ள நிலையில் நான்காவது மோதிரம் இளவரசர் வில்லியம்ஸ் மூலம் சேர்க்கப்பட்டது.
முதல் மூன்றும் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார ரீதியான முதல் மோதிரமாக இது அமைந்துள்ளது.