கொழும்பில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்தின் கதவுகளை மக்கள் தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதிக்கு நேர்ந்த நிலை

இந்தநிலையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டமாக பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தமது உச்சக்கட்ட எதிர்ப்பினை வெளிப்படுத்தும் அளவிற்கு எதிர்ப்பினை சம்பாதித்த, வரலாற்றில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச திகழ்கின்றார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் மூலம், பல அரசியல் மாற்றங்கள் நிகழந்திருந்தன.
இந்தநிலையில் இன்றைய போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.