வரலாற்றிலே முதன் முறையாக போர் விமானங்கனை இயக்கும் இந்திய சாதனை பெண்கள்!
இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானங்களை இயக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பெண் விமானிகள் இன்று முதல் தங்களது பணியை தொடங்கியுள்ளனர்.
கடந்த 1991 ஆம்ஆண்டு முதன் முதலாக இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இதுவரை ஹெலிகாப்டர்மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கி வந்தனர்.
இந்திய போர் விமானங்களை இயக்க ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங், பீஹாரைச் சேர்ந்த பாவனா காந்த் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ஆகிய 3 பேரும் முன்னதாகவே போர் விமானிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
முதற்கட்ட பயிற்சி முடிந்த நிலையில், ஐதராபாத் அருகே உள்ள ஹகிம்பேட் விமானப்படை தளத்தில் இருந்து தங்களது சாதனை பயணத்தை இன்று துவங்கியுள்ளனர்.
போர் விமானத்தை இயக்கும் பெண் விமானியாக தனது பயணத்தை தொடங்கியுள்ள அவானி சதுர்வேதி ஆண்களுக்கு நிகராகஇந்த துறையில் சாதிப்பேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முன்னிலையில் மூன்று விமானிகளும் பிற விமானப்படை வீராங்கனைகளும் விமானப்படையில் முறைப்படி இனைணத்துக் கொல்லப்பட்டனர்.