முல்லைத்தீவுப் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை வளாகத்தில் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று இரவு பாடசாலை வளாகத்தின் களஞ்சிய அறையிலேயே தவறான முடிவெடுத்து உயிரை தனது மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் தற்போதுவரை சடலம் பாடசாலை வளாகத்திலேயே இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்டவர் பத்தாம்வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி இராசலிங்கம் (வயது-72) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.