மன்னாரில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தை வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில், அவருக்கு பகல் உணவு வழங்க சென்ற குறித்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் முருகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.