வன்கூவரின் அனல் தெறிக்கும் புதிய வரி குறித்து ரொறொன்ரோ நிலச் சொத்து சந்தை கவலை!

வன்கூவரின் அனல் தெறிக்கும் புதிய வரி குறித்து ரொறொன்ரோ நிலச் சொத்து சந்தை கவலை!

கனடா-ரொறொன்ரோவின் சூடான நிலச் சொத்து சந்தை மேலும் சூடு பிடிக்கலாம் என கருதப்படுகின்றது. வன்கூவரின் புதிய 15-சதவிகித அதிகரிப்பில் வெளிநாட்டவர்கள் புதிய இடங்களில் முதலீடு செய்ய முனைவதே காரணம் என கூறப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கத்தால் அறிமுகப்  படுத்தப்பட்ட புதிய வரி செவ்வாய்கிழமை நடைமுறைக்கு வருகின்றது. வட அமெரிக்காவில் அதி உயர் வீட்டு விலைகள் காணப்படும் இடங்களில் மெட்ரோ வன்கூவரும் அடங்குகின்றது.வீட்டு கட்டுபடியாகும் தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதன்காரணமாக ரொறொன்ரோவின் வீட்டு சந்தையும் அதிகரிக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு நுகர்வோர் வன்கூவரில் மட்டுமன்றி ரொறொன்ரோவிலும் மொய்க்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
யூன் மாதம் ஒரு வீட்டின் சராசரி விலை 746,546 டொலர்களாக இருந்துள்ளது.இது கடந்த வருடம் இதே மாதம் இருந்ததை விட 17சதவிகதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கூவர் சராசரி வீட்டு விலை 11-சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து 1,026,207டொலர்களாகியுள்ளது.
யூன் மாதம் 10 தொடக்கம் யூலை மாதம் 14ந்திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் பத்திற்கு ஒரு வீடு விற்பனையில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

– See more at: http://www.canadamirror.com/canada/67174.html#sthash.aXFTrp33.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News