பதுளை எல்ல பகுதியில் உள்ள வனப் பகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் 24 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறித்த தீ பரவல் காரணமாக சுமார் 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமடைந்துள்ளது.
மேலும் குறித்த தீ பரவலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வனவிலங்கு திணைக்களம், வனப் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 22 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பதுளை, ஹாலிஎல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சந்தேகநபர்கள் பண்டாரவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.