நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதும், ராக்கி படம் வெளியிடப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.