தல அஜித்தின் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் வரும் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம் தொடர்ந்து சிவாவுடன் அவர் இணையும் நான்காவது படம் என்பதால் விசுவாசம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று முதலில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அது முற்றிலும் வதந்தி என நிவின் பாலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கவேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக நிவின் கூறியுள்ளார்.