இலங்கையின் ஏனைய பாகங்களில் காணப்படும் மனித மற்றும் அபிவிருத்தி மட்டங்களுக்குச் சமமாக வடக்கு, கிழக்கினையும் மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால நிர்வாகத்தினை நிறுவுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டில் வடக்குரூபவ் கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், துறைசார் நிபுணர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் உள்ளீர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு ஒருங்கிணைப்பு பணிகளை வடரூபவ்கிழக்கைச் சார்ந்த மதத்தலைவர்களிடத்தில் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், குறித்த இடைக்கால நிர்வாகத்தின் அதிகாரத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஓர் உச்சசபை ஸ்தாபிப்பதற்கு முனைப்புக்காட்டப்படுகின்றது.
அந்த சபையானதுரூபவ் சிறப்பு சட்டவாக்கல்ரூபவ் நிறைவேற்றதிகார, அரசியல்ரீதியான, பொருளாதார ரீதியான நிதிசார்பான, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட வருட காலத்திற்குமான இடைக்கால நடவடிக்கை ஒன்றாக சர்வதேச நிதியுதவியினைப் பெறுவதற்கான அதிகாரங்கள் உட்பட்ட ஏனைய தொடர்புபட்ட, அதிகாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டுப் பிரச்சினையும் தொடர் வன்முறைச் சம்பவங்களும் மீளவும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தவும் சமமானதும் நிலைபேறானதுமான சமாதானத்தை அடையவும் இப்பிராந்தியத்தின் பூகோள-அரசியல் திடத்தன்மையினை நிறுவுவதற்கும் அதனைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்குமாக, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா மற்றும் நாடுகளின் கோப் குழுக்களைச் சேர்ந்த சர்வதேச சமூகத்தினை எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் நடுவர்களாகவும் அதன் பின்னால் இடம்பெறும் ஒப்பந்தங்களின் நடைமுறைப்படுத்தல்களுக்கு உத்தரவாதமளிப்பவர்களாகக் கொண்டு அவர்களின் அனுசரணையின்கீழ் சுயநிர்ணய உரிமை மற்றும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் தமிழ்த் தேசியக் கேள்விக்கு சமஷ்டிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல்ரீதியான தீர்வினைப் பெறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக யு.எஸ்.டாக், பிரித்தானிய தமிழர் பேரவைரூபவ் கனடிய தேசிய மக்களவை ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் கரிசனை கொண்டுள்ளன. அத்துடன் குறித்த விடயம் சம்பந்தமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினான சிவஞானம் சிறிதரனால் முன்மொழிவொன்று செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.