ஷங்கர் இயக்கத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு பிரச்சனை செய்ததால் படம் ட்ராப் செய்யப்பட்டது.
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக வடிவேலுவிடம் விளக்கம் கேட்டதற்கு, “ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். பொருளாதார இழப்பு, மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிக்க அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக சங்க வட்டாரத்தில் தகவல் அடிபடுகிறது.