வடமாகாண பிரதி அவைத்தலைவர் ஜெகநாதன் திடீர் மரணம்!
முள்ளியவளைப் பகுதியில் இன்று (01) காலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவருக்கு இருக்கும் நோய் காரணமாக உந்துருளியை விட்டு தூக்கி வீசப்பட்டு சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த மாகாண சபை தேர்தலில் முல்லைத்தீவு மாவட்திலிருந்து தெரிவாகி மாகாணசபையின் பிரதி அவைத்தலைவராக செயற்பட்டு வந்த இவர் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய இணைப்பு
வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அன்டனி ஜெகநாதனுக்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது
இதனையடுத்து விபத்தில் சிக்கிய அவர் உடனடியாக முல்லைத்தீவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
முன்னர் வடமாகாண பிரதி அவைத்தலைவர் ஜெகநாதன் ஆற்றிய உரை..