கடும் வறட்சி காரணமாக வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 133,678 குடும்பங்களின் 462,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமார் 267 கிராம சேவைபப் பிரிவுகளில் 34,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறட்சியின் மூலம் வடமாகாணத்தில் யாழ். மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 134 கிராம சேவைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், வன்னி மாவட்டத்தில் 11,000 க்கும் அதிகமான பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஒன்றிணைந்து பவுசர் வண்டி மூலம் நீர் விநியோயகம் செய்தாலும் அந்நீர் தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு போதியதாக இல்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.