வடக்கு முதல்வர் விரைவில் மீண்டு வர வேண்டும் : அமெரிக்கா
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிலிருந்து முழுமையாக மீண்டு வரவேண்டும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள, அமெரிக்க தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் போது நல்லிணக்கம் குறித்து போசப்பட்டதாக அவர், குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் அதிலிருந்து முழுமையாக மீண்டு வரவேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wished NP Chief Minister Justice Wigneswaran full recovery and good health, and heard his views on advancing #reconciliation in #SriLanka