வடக்கு முதல்வரை உடனடியாக கைது செய்யமாறு CIDயில் முறைப்பாடு
இந்த முறைப்பாடு இன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24ஆம் திகதி யாழில் எழுக தமிழ் பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்து தென்னிலங்கை அரசியல் வாதிகளிடத்தில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து எழுக தமிழ் பேரணியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த தினத்தில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக அவரை கைது செய்யுமாறு அந்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வடமாகாண முதலமைச்சர் அரசியலமைப்பினை மீறும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் வணக்கத்துக்குரிய அகுலுகல்லே சிறிஜினாநந்த தேரர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.