வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி!
சி.வி. விக்னேஸ்வரன் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் இலாபங்களுக்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகைய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மேலும் பம்பலப்பிட்டியவில் வசித்து வந்த சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் இலாபங்களுக்காகவே தற்போது கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.
அவரை கைது செய்து தனி ஈழம் பெற்றுக் கொடுக்க முற்படும் இன்னொரு தலைவனாக அவரை மாற்றிவிடும் நடவடிக்கையில் அரசு ஒரு போதும் ஈடுபட்டு விடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தக் கருத்துகள் இருவிதமாக நோக்கப்படுகின்றது. ஒருவகையில் பார்க்கும் போது வடக்கு மக்களின் கோரிக்கைகள் ஒரு போதும் நிறுவேற்ற மாட்டாது.
அதற்கு முட்டுக்கட்டையாக எப்போதுமே பெரும்பான்மையும் அரசு தரப்பும் இருக்கும் என்ற வகையில் சிந்திக்கத்தூண்டும். இதனை நிரூபிக்கும் வகையிலேயே தென்னிலங்கை அரசியல் தரப்பு தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றது.
மற்றொரு வகையில் வடக்கு முதலமைச்சரை கைது செய்ய மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதா? என்றும் எண்ணத் தோன்றும் அதற்கான வலியுறுத்தல்களும் கோரிக்கைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.
அண்மையில் யாழில் இடம் பெற்ற எழுக தமிழுக்கு பிறகு வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விடுதலைப்புலியாகவே சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.
பெரும்பான்மை அரசியல் தரப்பு அவரை கைது செய்யுமாறு கோரிக்கைகள் விடுத்து வருவதும், அதேபோல மீண்டும் இனக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் தென் இலங்கை அரசியல் வாதிகள் வாதிட்டு வருகின்றனர்.
இதேவேளை பௌத்த பிக்குகளும் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு தயாராக வேண்டும் என்ற கோரிக்கைகளை சிங்கள இனத்தவரிடையே பரப்பிக்கொண்டு வருகின்றமையும் அறியத் தக்கதாகவே இருக்கின்றது.
தற்போது சி.வி. விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டால் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் நாட்டில் பதற்ற நிலை தோன்றும் என்பது நிச்சயம்.
அதே சமயம் இதுவரைக்காலமும் அமைதியான முறையில் தமிழர்கள் மீதான அடக்கு முறைகள் நடைபெற்று வந்தன தற்போது ஒட்டுமொத்த அரசியல் தரப்பும் சி.வி. விக்னேஸ்வரன் மீது திரும்பியுள்ளனர்.
மேலும் கடும் போக்கு சிந்தனையாளர்களும் அதனை சாதகமாக பயன்படுத்தி இனக்கலவரத்தினை தூண்டும் விதமாக பகிரங்கமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த நிலை தொடருமானால் மீண்டும் இலங்கையில் இனக்கலவரம் தோன்றும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை வடக்கு முதலமைச்சர் அண்மையில் நிகழ்த்திய உரையானது ஆசுவாசத்தில் ஆற்றிய உரை அல்ல, எழுதி வைத்து திட்டமிடப்பட்டு வாசித்த உரை.
மேலும் கடந்த காலங்களில் இருந்து நோக்கும் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை அரசியல் யாப்பிற்கு முரண்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்றும், அதன்காரணமாக அவரை கைது செய்வது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற செயல் என்றே தென் இலங்கை புத்தி ஜீவிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.