மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் ஏ9 வீதியில் மாவட்ட தபால் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கட்டிடம் கடந்த 12.12.2024 அன்று சம்பிரதாயமாக பால் காய்ச்சப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பிரமான அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநருடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன். வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.