வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு அபாய வலயங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாடு முழுவதிலும் உள்ள 8 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோய் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.
அதற்கமைய, குறித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் தெரவித்துள்ளார்.