தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வடக்குக், கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழர்களின் தயாகமாக வடக்கு கிழக்கில் காணிகள் அபரிக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள பௌத்த மயமாக்களை முன்னெடுக்கிறது.
தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையிலானப் பிரச்சினை கடந்த 74 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எங்கள் மீது இனவழிப்பு யுத்தத்தையும் மேற்கொண்டிருந்தீர்கள். தற்போதைய ஜனாதிபதியே இந்த யுத்தத்தை முன்னெடுத்தார்.
பொறுப்புள்ள மூத்த அமைச்சர்கள் கூட எங்களது போராட்டங்களை புரிந்துகொள்ளாது, நாங்கள் சர்வதேச கவனத்தையீர்த்துகொள்வதற்காக போராடுவோம் என கூறுவது, நீங்கள் இன்னும் உங்களின் கடந்தக் காலத் தவறை திருத்தவில்லை. இது தொடர்பில் சிந்தித்து தவறை திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்து சிங்கள பௌத்த மயமாக்களின் ஊடாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அனுகுமுறையை மாற்றுங்கள் எனவும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]