இலங்கை – இந்தியா இடையே தரைவழி பாலம் அமைக்கப்பட்டால், இந்திய இராணுவம் ஒரு மணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிக்கும் என அரசியல் ஆய்வாளரும், புலனாய்வு செய்தியாளருமான எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை மீதான சீனாவின் தவிர்க்கமுடியாத காலூன்றலை சமப்படுத்தும் நோக்குடனேயே இந்திய – இலங்கை பால விவகாரம் மோடியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியானதொரு தரைவழி பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இராணுவம் ஒருமணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்யும்.
எதிர்காலத்தில் சீனா – இந்தியாவுடன் போர்தொடுக்குமாக இருந்தால், அமைதியான முறையில் இந்திய துருப்புக்கள் இலங்கை வருவதற்க்கான சிறந்த வழியாக இது பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டபோது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்தியாவின் நலனை மையப்படுத்தியே அமைந்திருந்தன.
அதில் இந்திய, இலங்கை மீது குறிவைத்த முக்கிய விடயம், “இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தும் திட்டம்”.” என தெரிவித்தார்.