தேசிய நல்லிணக்கம் உண்மையாகவே தெற்கில் நிலைபெற வேண்டுமானால், வடக்கில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சின்னங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான மகாநாயக்கர் கலாநிதி நுகேதன்னே பஞ்ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்துக்காக வட மாகாணத்துக்கு பொறுப்பாக செயற்பட அஸ்கிரிய பீடம் தன்னை நியமித்துள்ளது. வடக்கு மக்களுடன் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயற்பட வட மத்திய மக்களும், நாமும் விருப்பத்துடன் உள்ளோம்.
பிரபாகரன் காலத்தில் வடக்கில் காணப்பட்ட பௌத்த சின்னங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டன. தற்பொழுதும் இந்த நிலைமை வடக்கில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதனால், தேசிய நல்லிணக்கம் பழுதடைந்துள்ளது. வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் இதனை மக்களுக்கு எத்திவைக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.