வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.
வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக மேலதிக நீரை வெளியேற்றவென இன்று 11 வான்கதவுகளும் முழுதாக திறக்கப்பட்டுள்ளது. அதிகரித்த வெள்ள நீர் காரணமாக நீரோட்டப்பகுதிகளும் நீரேந்துப்பகுதிகளும்.மேலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
படையினர் உற்பட பலரும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமை மேலும் மோசமாகுமென கருதப்படுகின்றமையால் மக்களை விழிப்போடும் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் இருக்க அறிவுருதப்படுகின்றனர்.
புனரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடிக்கு பேணப்படவேண்டும் என்ற நிலை இருக்கும்போது 38 அடியினை எட்டும்வரை வான்கதவுகளை திறந்து மேலதிக நீரை வெளியேற்றாமைக்கு காரணம் என்ன?
கடும் மழை பொழிந்துகொண்டிருக்கும் போது குளத்தின் வான்கதவுகளையும் திறந்துவிடுவதால் ஏற்படும் அழிவுகளுக்கு பொறுப்புக்கூறுவது யார்?டிசம்பர் மாதத்தில் பொதுவாக மழைப்பொழிவு அதிகமாக காணப்படும் என்பது தெரிந்தும் மேலதிக நீரை திறந்து வெளியேற்றாமல் தேக்கிவைத்தது எதற்காக?
குளம் முழுக்கொள்ளளவான 36 அடிகளை எட்டியவுடன் வான் கதவுகளை திறந்து நீர்மட்டத்தை சமநிலையில் பேணியிருக்கவேண்டியது யாரின் கடமை?மேலதிகமாக இரண்டரை அடி தண்ணீர் என்பது சிறிய விடயம் அல்ல அது குளத்தின் முழுக்கொள்ளளவின் 20% அளவுக்கு வரக்கூடியது. அவ்வளவு நீரை தேக்கிவைத்து அதை ஒரேநாளில் திறந்துவிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஏன் எவரும் சிந்திக்கவில்லை?
நீர்ப்பாசன திணைக்களத்தினர் நீரை வெளியேற்றுவதில் அசண்டையீனமாக இருந்தனரா? அல்லது மேலும் இரண்டு அடி நீரை தேக்க முடியுமா என்ற பரீட்சார்த்த நடவடிக்கையாக வான்கதவுகள் முற்கூட்டியே திறக்கப்படாமல் இருந்ததா? என்ன காரணத்திற்காக நீர்மட்டம் 38 அடி தாண்டும் வரை அனைத்து வான்கதவுகளையும் திறக்காமல் இருந்தனர்?குளத்தில் மேலும் 2 1/2 அடி நீரினை தேங்கவைத்தமைதால் குளத்தின் நீரேந்துப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு பொறுப்புக்கூறப்போவது யார்?
கரைச்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு உற்பட இரணைமடு குளத்தை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ள நிலைமைக்கு இரணைமடு குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டமையும் மேலதிக நீர் தேக்கப்பட்டமையும் பிரதான காரணமாகும்.