வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போது வடக்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலைமையை காணமுடிகின்றது. நீண்ட நெடிய விடுதலை போராட்ட வரலாறுகளை கண்ட இனம் தமக்காக ஆயுத ரீதியாக போராடிய உத்தமர்களது போராட்டம் மௌனமானதன் பின்னர் ஏற்ப்பட்ட அரசியல் வெளியினை நிரப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின் அணிதிரண்டனர்.இதன் வெளிப்பாடாக 2009 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் சிறந்த பெறுபேற்றை கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தனர்.
ஆனாலும் கடந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலில் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்தது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இதற்கு முக்கிய காரணம் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் மாகாணசபையின் வினைத்திறனற்ற நிர்வாகமும் என்பதை மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு வெளியே நின்று தமிழ்த் தேசியத்தை சிதைப்பதனை நோக்காக கொண்டும் தனது தலைமையில் தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் தேசியத்துக்கு எதிரான மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்க்கான அடித்தளத்தை இட்டிருகிராற ? என பலமான கேள்வி எழுகின்றது.
இவ்வாறன ஒரு ஆளுமையற்ற ஒருவரையா மீண்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சராக கொண்டுவரப்போகுது என பல்வேறு விதமான கேள்விகள் எம்மவர்களிடையே எழுகின்றது. இந்த புள்ளியில் நாம் என்னொரு கேள்வியை மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தொடுகின்றனர். கடந்த உள்ளூர் அதிகார சபை தேர்தல்களில் அதிகமா இளைஞர்களை களமிறக்கியிருந்தனர். ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்த இச்செயற்ப்பாட்டின் தொடர்ச்சியாக ஏன் வடக்கு மாகாண சபையின் முதல்வராக ஒரு நடுத்தர வயதில் கட்சியோடும் தமிழ்த் தேசியத்தோடும் பயணிக்கும் ஒருவரை கூட்டமைப்பு அடையாளப்படுத்தக்கூடாது?
ஏன் கூட்டமைப்பில் இப்படியான ஒரு சிறந்த நிர்வாகி இல்லையா? அல்லது வயது குறைந்தவர்கள் முதலமைச்சராக வரமுடியாத? என்கின்ற கேள்விகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு மாகணத்தின் முதல்வராக பதவி ஏற்கும்போது வரதராஜபெருமாளுக்கு எத்தனை வயது பிள்ளையன் பதவியேற்கும் போது அவருக்கு எதனை வயது என்பதை பார்க்கவேண்டும்.
அத்துடன் வயதுக்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதை நாம் உலகமே வியக்கின்ற போரட்டத்தை வழிநடாத்திய தேசிய தலைவருக்கு போரட்டத்தை தொடக்கும்போது எத்தனை வயது என்பதை வைத்து முடிவெடுக்கவேண்டும்.
ஆகவே ஒரு சிறந்த நல்ல ஆளுமை நிர்வாக திறமை தேசியத்தின் வழியில் நிற்கும் ஒரு இளம் தலைவரை முதல்வராக்க வேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 இல் நடந்த தேர்தலில் வென்று வந்த பின்னர் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டார்.
விக்னேஸ்வரன் அவர்களே தமிழ் அரசுக் கட்சி நியமனம் கொடுக்காத பட்சத்தில் தான் வேறு அணிகளோடு சேர்ந்து தேர்தலில் நிற்கப் போவதாகச் சொல்கிறார். வேறு அணியும் சாத்தியப்படாவிட்டால் தான் தனிக் கட்சி தொடங்கி போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் புத்திசாலி என்றால் அவர் தமிழ் அரசுக் கட்சி 2013 இல் விட்ட பிழையை மறுபடியும் விடும் எனக் கனவிலும் எதிர்பார்க்க மாட்டார்.அவருக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன
அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியில் நீண்ட காலம் உழைத்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பாக இருக்கிறது.
ஆனால் விக்கினேஸ்வரன் மாற்று அணியில் களமிறங்கினால் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் அவருக்கு இணையான மக்கள் செல்வாக்கு உடையவரா என்பதை நோக்கவேண்டும்.
ஆகவே எது எப்படியோ மாகாண சபையை ஒரு கட்டுக்கோப்பன சிறந்த நிர்வாகமாக முன்னெடுக்க கூடிய தகமை உள்ளவர்கள் இருவர் உள்ளனர் ஒருவர் தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றையவர் ஈபிடீபி டக்ளஸ் தேவானந்தா ஆகவே தமிழ்த்தேசியத்துடன் எமது பயணத்தை நகர்த்த தமிழர்களின் தலைமை சிறந்த முடிவை எடுக்கவேண்டும்.