வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொண்டு வந்த அணுஆயுத சோதனையை வடகொரியா இனி நடத்தாது என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அறிவித்தார்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடந்தது, கூட்டத்தில் முக்கிய ராணுவ தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தினரிடையே கிம் ஜாங் உரையாற்றி கொண்டிருந்த போது மூத்த ராணுவ தலைவரான ரி மவுங் சூ (84) தலையை குனிந்தவாறு தூங்கியுள்ளார்.
இதையடுத்து கிம் ஜாங்கின் கோபத்துக்கு ஆளான ரி மவுங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏனெனில் இதற்கு முன்னர் நாட்டின் துணை பிரதமர் கிம் யங் ஜின், இது போன்ற முக்கிய கூட்டத்தின் போது தூங்கியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இது போல மேலும் சிலருக்கு மரண தண்டனை கிம் ஜாங் உன் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரி மவுங் சூ வயது முதிர்வு காரணமாக அசதியில் தூங்கியிருக்கலாம் எனவும், அவர் தலையை தொங்க போட்டிருந்தாலும் விரல்கள் அசைந்தது எனவும் சிலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள்