புத்தாண்டு தினத்தன்று தொலைக்காட்சியில் பேட்டியளித்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்காவை தாக்கி அழிக்கும் அணு ஆயுதத்தின் பட்டன் எனது மேஜை மீது உள்ளது. இதைகொண்டு ஒட்டு மொத்த அமெரிக்காவையும் என்னால் அழிக்க முடியும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், “என்னிடமும் அணு ஆயுதம் தொடர்பான பட்டன் உள்ளது. அது வடகொரியா தயாரித்துள்ளதை விட பெரியது மட்டுமின்றி அதிக ஆற்றலும் கொண்டது’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் பத்திரிகைத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘அடிக்கடி அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் வடகொரிய அதிபரின் மனநிலை சரியாக உள்ளதா என்று அமெரிக்க அதிபரும், அமெரிக்க மக்களும் கவலையடைந்துள்ளளனர். அடிக்கடி அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதால் இந்த சந்தேகம் எழுகிறது’’ என்றார்.