வடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா தொடர்ந்து சர்வதேசத்தின் சமாதானத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி எவுகணை பரிசோதனையை தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுபாப்பு சபையின் யோசனைகளை மீறுவதன் ஊடாக பிராந்தியத்தின் நிலைப்பாட்டிற்கும் நிலைப்பாட்டிற்கும் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
சர்வதேச நாடுகள் இணைந்து இதற்காக விரைவான தீர்வு வழங்க வேண்டும் என அந்த இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.