இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணா கொட அமெரிக்கா தனக்கு எதிராக விதித்துள்ள தடையின் பின்னணியில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளமை குறித்து ஆச்சரியம் வெளியிட்டுள்ள வசந்தகரணாகொட இந்த நடவடிக்கையின் பின்னால் வேறு ஏதோஇருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஏதோ இதன் பின்னணியில் உள்ளதாக கருதுகின்றேன், என தெரிவித்துள்ள வசந்த கரணாகொட யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களி;ன் பின்னர் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ஆச்சரியமளி;க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவஅதிகாரியும் அமெரிக்க தூதுவரும் எனக்கு எதிரான தடைக்கு காரணம் என நான் கருதுகின்றேன் எனவும் வசந்த கரணாகொட தெரிவித்துள்ளார்.
அரசசார்பற்ற அமைப்புகளும் ஏனைய விசாரணையாளர்களும் பதிவுசெய்த விபரங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அரசசார்பற்ற அமைப்புகளின் அறிக்கைகளை வைத்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் என்னை தடை செய்வது வெட்கக்கேடான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.