வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிப்பது அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் வருமானத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாடிக்கையாளர்களால் தங்கள் கடன்களை மீள செலுத்த முடியாது என கருதும் வங்கிகள் கடன் விண்ணப்பங்களை அதிகளவில் நிராகரிக்கின்றன.
மத்திய வங்கி சமீபத்தில் மேற்கொண்ட கடன் ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட கடன்விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது இந்த ஆய்வின் போது தெரியவந்துள்ளது. முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் வீழ்ச்சியடைய தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களின் மனோநிலையை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது தற்போதைய காலாண்டில் நிராகரி;க்கப்படும் கடன் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக தனியார் துறை கடன் வளர்ச்சியடையலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2021 இறுதி காலாண்டுடன் ஒப்பிடும்போது 2022 இன் முதல்காலாண்டில் நிராகரிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்கள் அதிகம் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.