தான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நான் இங்கு வெற்றி பெற்றேன், ஆனால் இங்கிலாந்தில் எனது வகுப்பில் நான் கடைசியாக வந்தேன். மொழி ஆய்வகங்கள் எனது ஆங்கில எழுத்தறிவை மேம்படுத்த உதவியது.
என் தந்தையின் அறிவுரைப்படி ஒவ்வொரு இரவும் செய்திகளைப் பார்த்தேன். ஆங்கில கல்வியறிவை மேம்படுத்துவது தகவல் தொழில்நுட்ப உலகை வெல்ல உதவும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.