இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்த “லெப்டொப்” நடனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
“லெப்டொப்” கணனிகள் எப்படிப் போனாலும் “டெஸ்க்டொப்” கணனிகளே இல்லாத எத்தனையோ பாடசாலைகள் நாட்டில் உள்ளன. கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைநோக்கிகள் கூட இல்லாத பாடசாலைகள் எத்தனையோ நாட்டில் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற கேலிக்குரிய நடனங்களை ஏற்பாடு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருமுறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை வைத்து இதுபோன்ற நடனங்களை நடாத்துவதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமன்றி, ஆசிரியர்களும் தரக்குறைவாக நோக்கப்படுவதற்கு காரணமாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த நடனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகையில்,
“இந்த நடனம் இடம்பெறுவது குறித்து தாம் அறியாத நிலையில் இருந்ததாகவும், அதனை அறிந்தவுடன் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 ஆவது சுதந்திர தின ஒத்திகை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட “லெப்டொப்” நடன படம், சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.