லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளி;ல்லா விமானதாக்குதலில் ஹமாசின் பிரதிதலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளார்.
பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களில் ஒருவரான அரோரி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் ஹமாசின் இராணுவபிரிவை சேர்ந்தவர்கள் .
இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ள ஹமாசின் பிரதி தலைவர் அதன் இராணுவபிரிவில் முக்கியமானவர் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயிற்கு நெருக்கமானவர் என பிபிசி தெரிவித்துள்ளது.
லெபனானில் அவர் ஹமாசிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பி;ற்கும் இடையிலான முக்கிய தொடர்பாடாக காணப்பட்டார்.
ஹமாசின் தலைமைத்துவம் மீதான இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சலே அல்அரோரி கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிகாரியொருவர் இந்த படுகொலைக்கு நேரடியாக பொறுப்பேற்காதது குறிப்பிடத்தக்கது.
யார் இதனை செய்திருந்தாலும்; இது லெபானான் மீதான தாக்குதல் இல்லை இது ஹெஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதல் இல்லை யார் இதனை செய்திருந்தாலும் இது ஹமாஸ் அமைப்பின் மீதான இலக்குவைக்கப்பட்ட தாக்குதல் – என இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார்.