ஆப்ரிக்க நாடான, லிபியாவில் நேற்று முன்தினம் இரவு, பென்காசியில் உள்ள குடியிருப்பு பகுதியில், கார் வெடிகுண்டு வெடித்தது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி, நடந்து கொண்டிருந்த போதே, அதே இடத்தில், மற்றொரு காரில் இருந்த குண்டும் வெடித்தது.
இதில், 34 பேர் கொல்லப்பட்டனர்; ௩௨ பேர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்புக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.