லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
.2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேசசமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.பெங்காசி சூசே அல்மார்ஜ் உட்பட பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
150க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன – டெரனா நகரில் 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என செம்பிறைகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு இலட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் இரண்டு அணைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மீட்பு நடவடிக்கையி;;ன் போது பல பாதுகாப்பு படையை சேர்ந்த பலரும் காணாமல்போயுள்ளனர்.