கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பில் இடம்பெற்ற ஊழலில் தனக்கும் தொடர்பு உள்ளது என்பதை பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு இயக்குனர் பிரையன் பொன்னி ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பிய முன்னாள் முதலமைச்சர் கிறிஸ்டி கிளார்க் இனவாத வாக்குகளை வெல்வதற்கான மூலோபாயத்தில் பிரையன் பொன்னி தொடர்புபட்டிருந்ததாக 2016இல் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நேற்றைய தினம் பிரையன் பொன்னி தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அன்றைய தினமே விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.