லிபரல் அரசின் அமைச்சரவையிலிருந்து மூன்றாவது அமைச்சரும் பதவிவிலகல்!
இந்தவாரம் ஆளும் லிபரல் அரசின் அமைச்சரவையிலிருந்து இருவர் பதவிவிலகியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது அமைச்சராக, மூத்தோர் விவகார அமைச்சரான மரியோ சேர்ஜியோ, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மாநிலத்தின் சட்டமா அதிபர் மாடலின் மெய்லர் மற்றும் உள்ளூராட்சி, வீடமைப்புத்துறை அமைச்சர் ரெட் மக்மீக்கின் ஆகியோர் பதவி விலகியிருந்தனர். இந்நிலையில், தனது அரசியல் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளதனால் லிபரல் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக மரியோ சேர்ஜியோ அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தான் தொடர்ந்து அமைச்சரவையில் உறுப்பினராக இருக்க விரும்பவிலலை என்ற தகவலை முதல்வர் கத்தலின் வின்னிடம் தெரிவித்ததாகவும், சிறந்த சிந்தனைகளைக் கொண்ட புதிய சந்ததியினருக்கு வழிவிடுவதற்காக தருணம் இது என்று கருதுவதாகவும் மரியோ சேர்ஜியோ தெரிவித்துள்ளார்.
மரியோ சேர்ஜியோ ரொரன்ரோவின் யோர்க் மேற்கு தொகுதியில் இருந்துரூnடிளி; 1995 ஆம் ஆண்டில் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார்.
பின்னர் ஒன்ராறியோ அமைச்சரவையில் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்தில் இருந்து மூத்த குடிமக்கள் விவகார அமைச்சராக பொறுப்பு வகித்தமை குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.canadamirror.com/canada/64212.html#sthash.fjRRxSku.dpuf