உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்
இந்த நிலையில், மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறித்த புதிய விலைப்பட்டியலின் படி, குறைந்த விலையாக கொழும்பு மாவட்டத்தில் எரிவாயு கொள்கலன் ஒன்று 4664 ரூபாவிற்கும், அதேவேளை அதிகூடிய விலையாக யாழ்ப்பாணத்தில் 5044 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
