லிட்ரோ எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைவடையும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நாளை நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
300 ரூபா வரையில் குறைவடையும்

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை இவ்வாறு 200 முதல் 300 வரையில் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.