லாஸ் வேகாஸில் துப்பாகிக்கிச் சூடு நடத்திய நபரின் தோழி விசாரணைக்காக அமெரிக்கா வரவழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சி ஒன்றிம் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்த நிலையில் அதனை அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்திய ஸ்டீபன் படாக் (64) தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தங்கியிருந்த அவரது தோழி மரிலூ டான்லி என்ற பெண் தலைமறைவாகிவிட்டார்.
இந்த் நிலையில் மரிலூ சான்லி விசாரணைக்காக அமெரிக்கா அழைத்து வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிகின்றன.
ஸ்டீபன் படாக் துப்பாக்கிச் சூடு நடந்துவதற்கு ஒரு வாரம் முன்னர்தான் மரிலூ டான்லி அமெரிக்காவிலிருந்து பிலிப்பைன்ச் சென்றிருக்கிறார் என்றுதெரிய வந்துள்ளது.
இவருடனான விசாரணையில் லாஸ் வேகஸ் துப்பாக்கிச் சூட்டின் உண்மை காரணம் அறியப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.