லண்டன் மேயர் சதிக் கான் – கனடா பிரதமர் ஜஸ்டின் இடையே சந்திப்பு
லண்டன் மாநகரின் மேயர் சதிக் கான் மற்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டிர் ரூடோ ஆகியோரிடையிலான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) கனடாவின் மொன்ரியல் நகரில் இடம்பெற்றுள்ளது.
சதிக் கான், தான் மேயராகத் தெரிவாகியதன் பின்னர் முதன் முதலாக தற்பொழுது கனடாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பிரதமர் ஜஸ்டினை சந்தித்தார். இதன்போது ஜஸ்ரின், சதிக்கை வரவேற்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ஜஸ்டின், ‘சதீக்கின் தலைமைத்துவம் உண்மையிலேயே அட்புதமான விதத்தில் உள்ளது. அவர் மேற்கொள்ளவுள்ள திட்டங்களின் கருப்பொருள்கள் அனைத்தும் சிறந்த ஒரு முன்னேற்றத்தை நோக்கி செல்கின்றமையைக் காட்டுகின்றது’ என்று தெரிவித்தார்.
அதேபோன்று, அங்கு கருத்து தெரிவித்த சதிக் ‘கனடாவில் ஜஸ்டின் மேற்கொண்டுள்ள திட்டங்கள் மிகவும் வெற்றியளிப்பவையாக உள்ளன. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு லண்டன் நகரிலும் பல திட்டங்களை செய்யலாம்’ என்று தெரிவித்தார்.
சதிக் கான், தனது கனடா விஜயத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இது அவர் மேயராகியதும் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.