லண்டன் மாணவர்கள் கனடாவில் கண்டுபிடித்த அதிசயம்!
கனடாவில் 420 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் இருந்ததற்கான புதை படிமத்தை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சூரியனும் அதன் கோள்களும் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக கூறப்படுகிறது. இருப்பினும், 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிரினங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கனடாவில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான புதை படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதை படிமம் மூலம், 420 ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்கள் தோன்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான வலிமையான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் மிக பழமையான புதை படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததன் மூலம் சுமார் 340 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரினங்கள் தோன்றியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின் மூலம் 420 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூமியில் உயிரினங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் பகுதியில் இந்த படிமங்களை ஆராய்ச்சி குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த புதை படிமம் தலைமுடியை விட அகலம் குறைவானதாக பாறைகளில் படிந்துள்ளது. இதன் மூலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவாகி உள்ளது. இதில் 10 கோடி ஆண்டுகள் கழித்து உயிரினங்கள் உருவாகி இருக்கலாம் என்பது இந்த புதை படிமத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பானது நமது கோள் தோன்றிய வரலாறு, பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் உயிரினங்கள் தோன்றியது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகின்றது.