பிரித்தானியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பொலிசார் 12 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இத்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமுற்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய 3 பேரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு தாக்குதலில் தொடர்புடையவர்களை பொலிசார் தீவிரமாக தேடிய நிலையில் தற்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனில் உள்ள Barking பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரை குறித்து பெண் ஒருவர் பேசியபோது, அவர் வசித்த பகுதில் நபர் 3 ஆண்டுகளாக தங்கியிருந்ததாகவும், அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.