லண்டன் சிற்றி விமான நிலையத்தில் ரசாயனத் தாக்குதல் அச்சம்: பயணிகள் வெளியேறினர்
லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டுள்ளதுடன் விமானப் பறப்புக்களும் நிறுத்தப்பட்டன.
இன்று மாலை 4.15 அளவில் குறித்த விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளில் பலர் சுவாசிக்க சிரமப்பட்டநிலையில் அவதியுற்றனர்.
இதேவேளை 26 பயணிகளுக்கு அம்புலன்ஸ் சேவைப்பிரிவினர் அவசர சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இரு பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் பயணத்துக்காக காத்திருந்த 500 இற்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பாக விமான ஓடுதளபக்கமாக அழைத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் பயணிகள் சுகவீனப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதுடன் விசாரணைகள் தொடர்கின்றன.