புரூ-டி சேஞ் என்னும் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிலையம் ஒன்றை நடத்திவந்த, தயாபரன் ராமநாதன் என்னும் தமிழர் 9 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ளார். அவர் சுமார் 107 மில்லியன் பவுண்டுகளை சலவை செய்து முறையற்ற காசை முறையான காசாக மாற்றியுள்ளதோடு. ஒரு குழுவாக இயங்கி இதனை செயல்பட்டு வந்துள்ளார் என பிரித்தானிய திறைசேரி நிலையம் அறிவித்துள்ளது.
சதக் நீதிமன்றில் நடந்த வழக்கில் அவர் குற்றவாளியாக இனம் காணப்பட்ட அதேவேளை அவருக்கு 9 வருட சிறைத்தண்டனை வழங்கப்படதோடு அல்லாமல். லண்டன் ஹரோவில் இருக்கும் அவருக்கு சொந்தமான வீட்டையும் திறைசேரி கைப்பற்றி ஏலத்தில் விட உள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
தயாபரனிடம் இலங்கை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் பல சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதனை பறி முதல் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வருவாய் துறை மற்றும் திறை சேரி பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்த கும்பல் ஒரு தொகை மோசடி பணத்தை லண்டன் பண பரிவர்த்தனை ஊடாக இலகுவாக 500 பவுண்ட் நாணயங்களுக்கு மாற்றியுள்ளதாக HMRC விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்த மோசடி கும்பலின் தலைமை அதிகாரியாக தயாபரன் செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
விக்டோரியாவில் இரண்டு அந்நிய செலாவணி நிலையங்களில் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1.3 மில்லியன் பவுண்ட் சொத்துக்களை கட்டியெழுப்பிய அந்த குடும்பலின் தலைவரான தயாபரனுக்கு Eastcote Lane, Harrow, பரிஸ், இந்தியா மற்றும் இலங்கையிலும் சொத்துக்கள் உள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவரது சொத்துக்கள் பறிக்கப்படுவாக நீதிபதி அறிவித்துள்ளனர்.