பேஸ்புக் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை லண்டன் நகரில் தொடங்கியதன் மூலம் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
லண்டனில் புதிய அலுவலகத்தை தொடங்கியது பேஸ்புக் நிறுவனம்
லண்டன்:
இளைஞர்கள் அதிகமாக உபயோகித்து வரும் செயலி பேஸ்புக் ஆகும். இதன் மூலம் எந்த மூலையில் உள்ள நபரையும் தொடர்பு கொண்டு பேசலாம். அவர்களின் புகைப்படத்தை பார்க்கலாம்.
லண்டனில் இந்த நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. 2018 ம் ஆண்டிற்குள் 2300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. பல நாடுகளில் அதன் கிளைகள் உள்ளன.
இந்நிலையில், லண்டன் நகரில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு முதல் 800க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவித்தனர்.
லண்டனில் அதிக அளவில் இஞ்சினியர்கள் உள்ளதால் தொழில்நிறுவனங்கள் தொடங்குவதற்கு சரியான இடமாகும்.
ஏற்கனவே தொடங்கப்பட்ட அலுவலகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேஸ்புக்கின் வளர்ச்சியில் லண்டன் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் ஆர்க்கிடெக் பிரங்க் ஜேக்ரி புதிய அலுவலகத்தை வடிவமைத்துள்ளார். அதில் இன்ஜினியர்கள், டெவலப்பர்ஸ், மார்க்கேட்டிங் மற்றும் சேல்ட் போன்ற பிரிவிகள் பணிபுரியும் என கூறப்பட்டுள்ளது.