பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் வேனை வைத்தும், கையில் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 22-பேர் பலியாகியுள்ளனர். 48-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளையும் பொலிசார் சம்பவ இடத்திலே சுட்டு கொலை செய்தனர். மூன்று தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் Butt( 27), Rachid Redouane (30), Youssef Zaghba(22) ஆகும்.
இந்நிலையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதிகள் என்ன சதித் தீட்டம் தீட்டியிருந்தனர் என்பது குறித்த தகவலை ஸ்காட்லாந்து யார்டு பொலிசாரான Dean Haydon கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் வாடகைக்கு லாரி ஒன்றை ஆன்லைனில் புக் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் கட்டணம் செலுத்துவதற்கு பல முறை முயன்றுள்ளனர். அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
வாடகைக்கு புக் செய்த லாரியின் எடை சுமார் 7.5 டன் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னரே அவர்கள் வாடகைக்கு மற்றொரு வாகனமான Renault வேனை எடுத்துள்ளனர். அவர்கள் மட்டும் லாரியை வாடகைக்கு எடுத்திருந்தால், பாதிப்பு அதிகமாகியிருக்கும் என்றும் அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு பிரான்சில் நடந்த நைஸ் தாக்குதலும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடந்த அந்த தாக்குதலின் போது தீவிரவாதிகள் லாரியை பயன்படுத்தினர்.
இதில் 86-பேர் பலியாகினர். அதையே இவர்கள் தூண்டுதலாக வைத்துக் கொண்டு லண்டன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.