ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் சேவியர் பெட்டல் தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரதமர் சேவியர் பெட்டல், சுகாதார அலுவலகம் வகுத்துள்ள விதிகளின்படி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.” என அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் தலைவலி என லேசான அறிகுறிகள் அவருக்கு தென்படுவதால் 10 நாட்கள் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் வீட்டில் இருந்தபடியே தனது அலுவல் பணிகளை மேற்கோள்வார் என்று அநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
48 வயதான பெட்டல் அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்ட தடுப்பூசியை மே 6 ஆம் திகதி போட்டுக் கொண்டுள்ளார். இவர் ஜூன் 24-25 திகதிகளில் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.