மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று அக்ரா பத்ரா மற்றும் அருந்ததி தராஃப்தார் ஆகியோருக்கு திருமண நடைபெற்றது. வழக்கமாக மணமகள் வீட்டுக்கு மணமகனை குதிரை அல்லது காரில் ஏற்றி அழைத்து வருவது மரபாக இருக்கிறது. ஆனால், இதனை மாற்றி புது முறையில் அக்ரா பத்ரா வருகை தந்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மணமகன் அக்ரா , ‘எனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பினேன். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். இதனால், சாலையை மிதித்து கடினமாக்கும் ‘ரோட்ரோலர்’ வாகனத்தில் மணமகள் வீட்டுக்கு செல்ல நினைத்தேன்.
நான் நினைத்திருந்தால் விலை மதிப்பு மிக்க சொகுசு கார்களில் ‘மாப்பிள்ளை ஊர்வலம்’ சென்றிருக்க முடியும். ஆனால், அது வழக்கமாக எல்லோரும் செய்வது போல்தான் இருக்கும். இப்போது ரோட்ரோலர் வாகனத்தில் நான் மணமகள் வீட்டுக்கு சென்றது விரைவில் செய்தியாகும் வாய்ப்பும் உள்ளது’ என்று கூறினார்.