ரொறொன்ரோ பாடசாலையில் கூகைகட்டு!
அண்மையில் ரொறொன்ரோவில் பரவிய கூகைகட்டு தற்போது ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை ஒன்றிலும் இறங்கியுள்ளதாக ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
மார்ச் 3-அளவில் ரொறொன்ரொ பாடசாலையில் ஒருவருக்கு இந்நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் பாடசாலையின் பெயரை ரொறொன்ரோ பாடசாலை தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டது ஒரு ஆசிரியரா மாணவரா அல்லது ஊழியரா என தெரியவரவில்லை.
தங்கள் பிள்ளைகளின் தடுப்பூசிகள் இன்றுவரை புதுப்பிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்துமாறு பாடசாலை சபை கேட்டு கொள்கின்றது. நான்கு வயதிற்கும் அதற்கு மேற்பட்ட வயது பிள்ளைகளிற்கும் தடுப்பூசி அவசியம்.வயதான பிள்ளைகள் இரண்டு அளவுகள் தடுப்பூசியை பெற வேண்டும் அல்லது (MMR) அல்லது (MMRV) பெற வேண்டும் என அறிவிக்கப்படுகின்றது.
பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கு தடுப்பூசி அத்தியாவசியம் என ரொறொன்ரொ பாடசாலை தெரியப்படுத்திய பின்னர் தாக்கம் குறைவென சபை தெரிவித்துள்ளது.
ரொறொன்ரோவில் 26பேர்களிற்கு கூகைக்கட்டு கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மனிரோபா Western Canada hockey teams மற்றும் கனடாவின் மற்றய பகுதிகள் U.S..ஆகிய இடங்களில் அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.