ரொறொன்ரோவை கலக்கப்போகும் வார இறுதி விழா கொண்டாட்டங்கள்!
கனடா-இந்த வார இறுதி நாட்களில் ரொறொன்ரோ மாநகரில் பாரிய விழா கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன.
உணவு, ஆடல், பாடல் தொடக்கம் யோகா நமஸ்காரங்கள் மற்றும் பன்முக கலாச்சாரங்களை கொண்டாடும் முகமாக நகரின் பகுதிகளில் இந்த வார இறுதி நாட்களில் நிகழ்வுகள் இடம்பெறும்.
இதன் காரணமாக வீதிகளும் போக்குவரத்திற்கு
மூடப்படுகின்றன.டன்வோர்த் அவெனியுவின் ஒரு பகுதி மூடப்படும். கட்டுமான பணிகாரணமாக வேறு சில பாதைகளும் மூடப்படவுள்ளன.
டன்வோர்த் சுவை:
கனடாவின் மிகப்பெரிய உணவு திருவிழாவான டன்வோர்த் சுவை நிகழ்வு 23வது வருடமாக இடம்பெறுகின்றது.
இத்திருவிழாவில் நூற்றிற்கும் மேற்பட்ட உணவு வகைகள் மக்களை வரவேற்கும். சகல வயதினருக்கும் ஏற்ற இலவச நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது.
பன்முககலாச்சார கொண்டாட்டம்:
ஸ்காபுரோவில் சமூக கலாச்சார விழா இரண்டாவது ஆண்டு நடைபெறுகின்றது. எல்ஸஸ்மியர் மற்றும் மக்கோவான் வீதியில் அல்பேர்ட் கம்பெல் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுகிழமை வரை இந்நிகழ்வு இடம்பெறும்.கனடிய பிரசாவுரிமை நிகழ்வு மற்றும் மறு உத்தரவாத நிகழ்வு போன்ற உணர்ச்சி ரீதியான தருணங்களும் இடம் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்க் கொண்டாட்டம்:
வருடாந்த ஜேர்க் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை சென்ரெனியல் பார்க் எற்றோபிக்கோவில் நடைபெறும்.
சுவை மிகுந்த உணவு வகைள், ஒரு விஐபி கார்டன், ஒரு காரசாரமான உணவு அருந்தும் போட்டி போன்ற சுவையான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. பிரபல்யங்கள் சிலரும் வருகை தருவர் என கூறப்படுகின்றது. யுலி பிளேக் மற்றும் றுபென் ஸ்ருட்டாட் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
யோகா நிகழ்வு:
வருடாந்த யோகா கொண்டாட்டம் ஹாபவுரொன்ட் சென்ரரில் இடம் பெறுகின்றது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் யோகா ஆர்வலர்கள் பல வகையான யோகா செயல் பாடுகளில் கலந்து கொள்ளலாம். நேரடி இசை மற்றும் குழந்தைகளிற்கான யோகா வகுப்புக்களும் நடைபெற உள்ளன.